கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி
கொட்ட வேணும் மேளம் கையைக் கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்குச் சொல்லும் நேரம்
அன்னாடம் நாட்டுல வெண்டைக்கா சுண்டைக்கா விலையேறிப் போகுது மார்க்கெட்டுல
என்னாட்டம் ஏழைங்க அதை வாங்கித் திங்கத்தான் துட்டில்லை சாமி என் பாக்கெட்டுல
வீட்டுக்கு வீடு எங்களைத்தான் மரமொன்னு வைக்கச் சொல்லுறாக
மரமேதான் எங்க வீடாச்சு சாமி ஏழைக வாயை மெல்லுறாக
எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னாலதான்
கண்ணால பாரு நேராக்கிக் காட்டு முன்னாலதான்
ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழையைப் பாக்கணுமே
எல்லோரும் போலென்னை நீயும்தான் தள்ளாமல் எந்நாளும் தாயெனக் காக்கணுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கணுமே
எப்போதும் காவல் நானிருப்பேன், என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாங்கு பேசும் ஊர் சனம்தான் புண்ணாகிப் போச்சே என் மனம்தான்
என்னாட்டம் சாமி எல்லோர்க்கும் சொந்தம் எப்போதும்தான்
என்னோடு நீயும் உன்னோடு நானும் எந்நாளும்தான்
_kottaiyai vittu vettaikku pogum sudalai madasamy_
_sudalai mada samiyum naan dhaan poosari nee dhaan soodam ethi kaami_
_kotta venum melam kaiyai katta venum yaarum_
_anji nikkum oorum arul vaakku sollum neram_
Madasamy of Cemeteries is leaving his fort for hunting.
I am the Madasamy of Cemeteries, you are my priest. Worship me by burn camphor.
Drums are played, and everyone folds their arms (a sign of respect).
The town watches with fear as Madasamy speaks divine words.
_annaadam naattula vendaikka sundaikka vilai eri pogudhu market-la_
_ennaattam ezhainga adhai vaangi thingaththaan thuttu illai saami en pocket-la_
_veettukku veedu engalai thaan marm onnu vaikka solluraaga_
_marame dhaan enga veedu aachu saami ezhaiga vaayai melluraaga_
_ellorin vaazhvum seeraaga venum unnaala dhaan_
_kannaala paaru neraakki kaattu munnaala dhaan_
Price of staple vegetables keep rising everyday.
Poor like me have no money to buy food.
They are asking every house to plant a tree.
For us poor, trees _are_ houses.
We chew empty mouths (because we have nothing else to chew).
Everyone’s life must improve in your (Madasamy’s) grace.
See our state with your own eyes, and make it straight.
_oor suthum saamiye nee konda kannaala ennaattam ezhaiyai paakanume_
_ellorum pol ennai neeyum dhaan thallaamal ennaalum thaay ena kaakkanume_
_un kitta oar varam ketkanume_
[The girl singing these lines is daughter of a prostitute. No one would speak to her. No kid would play with her. She pleads to Madasamy.]
God that patrols the towns, see poor me with your eyes.
(Being seen by god alone implies salvation.)
Don’t reject me like everyone does. Like a mother, protect me
I have wishes to ask you.
_eppodhum kaaval naan iruppen, ennenna venum naan koduppen_
_pollaangu pesum oor sanam dhaan punnaagi poche en manam dhaan_
_ennaattam saami ellorkkum sondham eppodhum dhaan_
_ennodu neeyum unnodu naanum ennaalum dhaan_
[Madasamy replies to the girl]
I will protect you always. I will give you everything you want.
[Girl] Everyone in the town blames me. My mind is wounded.
[Madasamy] Gods like me are for everyone. You and I will be together always.
No comments:
Post a Comment